குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் மதுரையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்ய உள்ளது என்றார்.
அதன்படி 130 நிறுவனங்கள் ஆன் லைனில் விண்ணப்பித்திருந்தது அவற்றின் 25 நிறுவனங்களுடன் கொள்முதல் தொடர்பாக அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என்றும், புதிய கண்டுபிடிப்புகளையும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நிறுவனத்தின் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும், குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதன்படி, நகை கடன் தள்ளுபடி, 4 ஆயிரம் ரூபாய் கடன் நிவாரண உதவி வழங்கியது போன்று தகுதியுடைய நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரித்து வருகிறோம் என்றும் கூறினார்.
Must Read : ஆடு திருடிய நபரை காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர்.. வீடியோ வெளியான நிலையில் பணியிடை நீக்கம்
எவ்வளவு விரைவில் ஊக்க தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதி அளித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.