தமிழ்நாடு அரசுப் பணிகள் தமிழருக்கே என்ற வகையில் சட்டத் திருத்தம்- சட்டப்பேரவையில் பி.டி.ஆர் உறுதி
தமிழ்நாடு அரசுப் பணிகள் தமிழருக்கே என்ற வகையில் சட்டத் திருத்தம்- சட்டப்பேரவையில் பி.டி.ஆர் உறுதி
பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாடு அரசுப் பணிகள் தமிழருக்கே கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவை இன்று 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சட்ட முன்வடிவை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிமுகம் செய்தார்.
அதைத்தொடர்ந்து இன்றைய தினமே இந்த சட்ட முன்வடிவு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், ‘அனைத்து அரசு பணிகளிலும் தமிழர் அல்லாதோர் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கும் வகையில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும் என கூறினார்.
அதற்கு பதிலளித்து பேசிய நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ‘கடந்த கால அரசுப்பணிகளில் நேரடியாக மாநில அரசுப்பணியாக இருந்தாலும், மாநகராட்சி, பஞ்சாயத்தாக இருந்தாலும் தமிழர்களுக்கே வேலை கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
அதன்படியே தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணிகளில் சேர முடியும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக இதுவரை எந்த பணி நியமனங்களும் இதுவரை செய்யப்படவில்லை. இனி வரவுள்ள அனைத்து பணி நியமனங்களும் தமிழர்களுக்கே வழங்கும் நிலையில் தான் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள், மாநகராட்சிகள், பஞ்சாயத்துகளிலும், தேயிலை கழகம் என அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்களே பணியில் சேரும் நிலை இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.