ரோஸ் என்றும் மல்லிகை ஆகாது - ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு அமைச்சர் பிடிஆர் விளக்கம்

பழனிவேல் தியாகராஜன்

குஜராத் முதலமைச்சராக இருந்த போது, மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசின் உரிமைக்கு குரல் கொடுத்தவர் நரேந்திர மோடி.

 • Share this:
  ஆளும் கட்சியாக இருந்தாலும்,எதிர்கட்சியாக இருந்தாலும் திமுகவின் நிலைப்பாடு ஒன்று தான் என்று ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.

  நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசு என்பற்கு பதிலாக சமீபகாலமாக ஒன்றிய அரசு என்று அழைப்பதை பார்க்கிறோம் என்றார். 19 ம் நூற்றாண்டு பெண் கவி ஒருவர் எழுதிய கவிதையில் Rose is a Rose is a Rose என்ற வரி வரும். எப்படி அழைத்தாலும் அதன் ரோஸ் மணத்தை மாற்ற முடியாது. அதுபோல எப்படி அழைத்தாலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசின் அதிகாரத்தை அதிகரிக்கவும் முடியாது, குறைக்கவும் முடியாது என்று கூறினார்.

  அப்போது குறுக்கிட்டு விளக்கம் அளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், Rose is a Rose is a Rose என்பது ரோஸ் தான். அது மல்லிகை என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் மாநிலங்களுக்கான உரிமை பற்றிய பேசியதில் முன்னோடி மோடி தான். அவர் குஜராத் முதலமைச்சராக இருந்த போது, மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசின் உரிமைக்கு குரல் கொடுத்தவர். முதன்முறையாக ஜிஎஸ்டி மாநில அரசின் உரிமைகளை பறித்து கொள்ளும் என்றும் கூட அவர் தெரிவித்தார்.

  Also Read : பயோமெட்ரிக்கால் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்

  எனவே ஆங்கிலத்தில் Where I Stand Depends on where I Sit ஒரு பழமொழி உள்ளது. அதாவது நாம் எங்கு இருக்கிறேமோ அதற்கு ஏற்றது போல தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது என்று பொருள். இது பொதுவாக அரசியல்வாதிகளுக்கு பொருந்தும் என்றும் கூறுவார்கள். ஆனால் திமுகவை பொறுத்தவரை எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியாக இருந்தாலும் எங்கள் நிலைப்பாடு எப்போதும் ஒன்று தான் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: