• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காகிதமில்லா பட்ஜெட்டால் எழுத்தாளர்கள், புத்தக பதிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் - எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் பி.டி.ஆர் பதில்

காகிதமில்லா பட்ஜெட்டால் எழுத்தாளர்கள், புத்தக பதிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் - எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் பி.டி.ஆர் பதில்

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

காகிதமில்லா பட்ஜெட்டால் எழுத்தாளர்கள், புத்தக பதிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா வலியுறுத்தி உள்ளார்.

  • Share this:
    காகிதமில்லா பட்ஜெட்டால் எழுத்தாளர்கள், புத்தக பதிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா வலியுறுத்தி உள்ளார்.

    2021 - 2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் பொது விவாதம் துவங்கியது. அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, காகிதமில்லா பட்ஜெட் முன்னோடி திட்டமாக இருந்தாலும் இதனால் எழுத்தாளர்களுக்கு, புத்தக பதிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் கணினி மயமாக்கலை முழுமையாக்கி விட கூடாது. புத்தகங்களை வாசிப்பது முக்கியமான என்பதால் தான் இது குறித்து இங்கு பேசினேன். வரியில்லா பட்ஜெட் தான் ஆனால் இன்றைக்கு மட்டும் வரியில்லா பட்ஜெட்டாக இல்லை 2011 முதலே கடந்த 10 ஆண்டுகளாக வரியில்லா பட்ஜெட்டாக தான் உள்ளது என்றார்.

    இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2017-ல் நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது அவைமுன் வைக்கும் நூல்கள் கணினி மையமாக்கப்பட வேண்டும் என்று  அன்றைய பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். அதன் விலைவாக  நூல்களின் பக்கங்களை குறைத்து வழங்கப்பட்டது.

    சட்டப்பேரவை கூட்டத்தொடர் கணினி மயமாக்கப்பட்டாலும் போதிய அளவிற்கு பேரவை ஆவணங்கள் புத்தகம் வாயிலாகவும் வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார் அதனடிப்படையில் பேரவை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கணினி மையம் ஆக்கப்பட்டாலும் பேரவை குறித்தான ஆவணங்கள் புத்தகங்களாகவும் பேரவை உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: