Home /News /tamil-nadu /

காலதாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கும் மதிப்பெண்- அமைச்சர் பொன்முடி விளக்கம்

காலதாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கும் மதிப்பெண்- அமைச்சர் பொன்முடி விளக்கம்

க.பொன்முடி

க.பொன்முடி

ஆன்லைன் தேர்வின்போது காலதாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    காலதாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்களும் நிச்சயம் மதிப்பீடு செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசின் நிதிநிலை சரியானவுடன் திமுக அரசின் உறுதியான கல்விக்கடன் குறித்த அறிவிப்பு வெளியாகும். அண்ணாப் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று முடிந்த நிலையில் அதில் காலதாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த சுமார் 10,000 மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்படாது என அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடைபெற்று விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யவும், அசல் விடைதாளை கொரியர் மூலம் அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில மாணவர்கள் தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ததாகவும் அந்த மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படாது என வெளியாகி உள்ள தகவல்  தவறானது.

    காலதாமதமாக விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் நிச்சயம் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

    மேலும்  "கல்விக் கடன் ரத்து" செய்யப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக பேசிய அமைச்சர் பொன்முடி தமிழக அரசின் நிதிநிலை சரியானவுடன் கல்விக்கடன் குறித்த அறிவிப்பு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் இளநிலை படித்தவர்கள் முதுநிலை படிக்காமல் நேரடியாக பிஎச்டி படிக்கலாம் என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு இது குறித்து தமிழக உயர்கல்வித் துறை சார்பில் ஆராய்ந்து உரிய முடிவு எடுக்க விரைவில் குழு அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

    எட்டு வழிச் சாலை தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும் - அமைச்சர் எ.வ வேலு விளக்கம்

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை முதல் செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் நடைபெற உள்ளது. ஆன்லைன் தேர்வுகள் பொருத்தவரையில் அது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது. எனவே மாணவர்கள் நேரடி முறையில் தேர்வு எழுத தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதலே செயல்படுத்தப்படும் என கூறினார். தமிழ் வழியில் பொறியியல் படிப்பதற்கு தேவையான முக்கியத்துவத்தை தமிழக அரசு வழங்கும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Anna University, Ponmudi

    அடுத்த செய்தி