ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் போட்டியின்றி தேர்வு

அசோக் சிகாமணி -அமைச்சர் பொன்முடி

அசோக் சிகாமணி -அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த இந்திய சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசனின் மகள் ரூபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தலைவர் பதவிக்கு அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி மற்றும் பிரபு உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நெடுங்காலமாக தேர்தல் இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தது. சங்கத்தின் தலைவராக இருந்த இந்திய சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசனின் மகள் ரூபா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தலைவர் பதவிக்கு அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி மற்றும் பிரபு உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

  இந்த நிலையில் போட்டியில் இருந்த பிரபு அணியினர் அனைவரும் தங்களது மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி தேர்தெடுக்கப்பட்டார்.

  இதையும் படிங்க: இது என்ன பெரிய மழை.. இனிமேல்தான் பருவமழையே தொடங்குது.. வெதர்மேன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

  மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழனியும், பொருளாளராக ஸ்ரீனிவாசராவும் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டனர். அசோக் சிகாமணி விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளராகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத்தலைவராகவும் இருந்தவர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Minister Ponmudi