தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் அறிவியல் கோளரங்கம் அமைக்க அரசு முன்வர வேண்டுமென்றும் இதன் மூலம் பூமிபந்தின் வடிவத்தின் உள்நுழைந்து பிரபஞ்சத்தை கிராமப்புறத்தில் வசிப்பவர்களும் காண முடியும் மேலும் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான விடயங்கள் கற்றுகொடுக்க இயலுமென்றும், எதிர்கால தமிழ்நாட்டிற்கு நாத்திக கருத்தியலை இயக்கியவியல் பாடத்தோடு அறிவியல் அறிவை மாணவர்களுக்கு கற்றுகொடுக்க வேண்டுமென்பதால் கோளரங்கம் தேவை என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை வரவேற்பதாக கூறினார். மேலும், தமிழ்நாட்டில் சென்னை பெரியார் அறிவியல் கோளரங்கம், திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்கம், வேலூரில் மாவட்ட அறிவியல் கோளரங்கம், கோவையில் மண்டல அறிவியல் கோளரங்கம் இருப்பதால் புதுக்கோட்டையில் கோளரங்கம் அமைப்பது சிரமம் என்றார்.
மேலும், மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் என்னமென்று கூறிய அமைச்சர், ஒரு புதிய கோளரங்கம் அமைக்க வேண்டுமென்றால் 5 ஏக்கர் நிலமும் 15.20 கோடி ரூபாய் செலவும், பரமாரிப்பிற்காக 65 கோடி செலவு ஆகுமென்றார்.
பின்னர் கேள்வி எழுப்பிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தென் மாவட்டத்தில் ஒரு அறிவியல் கோளரங்கம் கூட இல்லை என்றும் மதுரையில் கோளரங்கம் அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.
Must Read : நாடு முழுவதும் கொரோனா பரவல் ஒரேநாளில் 66% அதிகரிப்பு : கலெக்டர்களுக்கு மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய கடிதம்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தமிழக அரசு அறிவியல் கோளரங்கம் அமைக்க திட்டமிட்டால் அது முதலில் மதுரையாகத்தான் இருக்குமென்றும், அரசு இதனை பரிசீலிக்கும் என்றும், வரும் காலங்களில் தமிழ்நாட்டின் நிதி நிலைக்கு ஏற்ப முடிவுகள், முதலமைச்சர் ஆலோசனைப்படி எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.