ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பேரறிவாளன் விடுதலை ஆவதற்கு காரணமாக இருந்தவர் மு.க.ஸ்டாலின் தான் - அமைச்சர் பொன்முடி

பேரறிவாளன் விடுதலை ஆவதற்கு காரணமாக இருந்தவர் மு.க.ஸ்டாலின் தான் - அமைச்சர் பொன்முடி

பொன்முடி

பொன்முடி

Thiruvarur : பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு 4 வருடமாக தீர்மானம் போட்டு சும்மா இருந்தவர்கள் அதிமுகவினர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பேரறிவாளன் விடுதலை ஆவதற்கு காரணமாக இருந்தவர் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான் என திருவாரூரில் நடந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார். 

திமுக ஓராண்டு ஆட்சி நிறைவு செய்ததை ஒட்டி, தமிழகம் முழுவதும்  சாதனை விளக்க பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடைபெற்று வருகிறது. அதந்த வகையில், திருவாரூர் கீழ வீதியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பங்கேற்ற ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் விவசாயிகளுக்கு என்று எதுவும் செய்யவில்லை குறிப்பாக நெல் கொள்முதலில் எதுவும் செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகிறார். சட்டமன்றத்திலேயே ஒலிக்க தெரியாத மணியன் இங்கே வந்து ஒலித்து கொண்டிருக்கிறார்.

நெல் கொள்முதல் விவகாரத்தில் தற்போதைய தமிழக அரசு செய்த அளவிற்கு எவரும் செய்யவில்லை. நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு எவ்வளவு இருந்தது தற்போது எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது விவசாயிகளுக்குத் தெரியும். மேலும் பாஜகவிடம் மடிப் பிச்சை கேட்கிறது திமுக என ஓ.எஸ். மணியின் கூறுகிறார். கலைஞர் காலத்திலிருந்து அனைவரையும் எதிர்த்து வளர்ந்த கட்சி திமுக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேரறிவாளன் விடுதலையாவதற்கு காரணமாக இருந்தவரே நம்முடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஆனால் அதிமுகவினர் நாங்கள்தான் முதலில் தீர்மானம் போட்டது என பெருமை கொள்கிறார்கள். 4 வருடமாக தீர்மானம் போட்டு சும்மா இருந்தவர்கள் அதிமுகவினர், ஆனால் ஒரே வருடத்தில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு காரணமானவரே திமுக தலைவர் ஸ்டாலின் தான்.

Must Read : நூல் விலை ஏற்றம்... ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு..

ஆனால், அதற்காக எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் சிலர் இருந்தால் கூட தேர்தல் வாக்குறுதியில் தலைவர் மு.க ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி காண்பித்துள்ளார் என அமைச்சர் பொன்முடி பேசினார்.

First published:

Tags: MK Stalin, Perarivalan, Ponmudi