முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எல். முருகன் பங்கேற்பு... பொன்முடி புறக்கணிப்பு.. சர்ச்சையில் பட்டமளிப்பு விழா...

எல். முருகன் பங்கேற்பு... பொன்முடி புறக்கணிப்பு.. சர்ச்சையில் பட்டமளிப்பு விழா...

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

Ponmudi : வழக்கத்திற்கு மாறாக பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சரை கௌரவ விருந்தினராக ஆளுநர் அழைத்திருப்பதாக அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இன்று நடைபெறவிருக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தாம் பங்கேற்கப் போவதில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ள நிலையில், பட்டமளிப்பு விழாவும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குறித்த அறிவிப்பிலும் அது தொடர்ந்திருக்கிறது.

பட்டமளிப்பு விழா தொடர்பாக தங்களை ஆளுநர் அலுவலகம் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறிய அமைச்சர் பொன்முடி, வழக்கத்திற்கு மாறாக மத்திய இணை அமைச்சர் எல். முருகனை கௌரவ விருந்தினராக ஆளுநர் அழைத்திருப்பதாக விமர்சித்தார். இதனால் பட்டமளிப்பு விழாவில் தான் பங்கேற்க போவதில்லை என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

தமிழக அரசை சீண்டும் ஆளுநர்?

அமைச்சரின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவும் அமைச்சரின் கருத்தை ஆமோதித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுநர் தமிழக அரசை சீண்டிப் பார்க்கிறாரோ என்ற சந்தேகத்தையும் விதைக்கின்றனர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவினர்.

தமிழ்நாட்டில பொதுவாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் அரசியல் பிரமுகர்களை அழைப்பது வழக்கம் இல்லை என்கிறார் முன்னாள் துணைவேந்தரான ஜவஹர் நேசன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களை பொறுத்தவரை அனைத்து வகையான நிர்வாக பணிகளையும் மாநில அரசே மேற்கொள்கிறது. பேராசிரியர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது முதல் மாணவர்களுக்கான கல்வி செலவு, பட்டமளிப்பு விழாவுக்கான செலவு வரை அனைத்தையும் தமிழ்நாடு அரசு ஏற்கிறது.

Must Read : ‘அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை’ - பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோவால் சர்ச்சை

பட்டமளிப்பு விழாக்களில் வேந்தரான ஆளுநர் பங்கேற்பது கவுரமாகவே பார்க்கப்படுகிறது. அந்த விழாக்களில், இணை வேந்தராக உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்று, ஆளுநருடன் இணைந்து பட்டங்களை வழங்குவது சம்பிரதாயமாகவே உள்ளது. எனினும் உயர்கல்வித்துறை அமைச்சர் பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றே கூறப்படுகிறது.

First published:

Tags: Governor, Graduation, Ponmudi, RN Ravi