ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொட்டும் மழையில் கிராம மக்களுடன் அமைச்சர் பொன்முடி வாக்குவாதம்.. சொந்த தொகுதியில் பரபரப்பு!

கொட்டும் மழையில் கிராம மக்களுடன் அமைச்சர் பொன்முடி வாக்குவாதம்.. சொந்த தொகுதியில் பரபரப்பு!

அமைச்சர் பொன்முடி கிராம மக்களுடன் வாக்குவாதம்

அமைச்சர் பொன்முடி கிராம மக்களுடன் வாக்குவாதம்

கிராம மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Viluppuram, India

  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கொட்டும் மழையில் திமுக அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்து டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திமுக அமைச்சர் பொன்முடியின் தொகுதிக்குட்பட்ட இந்த சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரிப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தலிங்கமடம் கிராமத்தில் இன்று நடைப்பெற இருந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கடையடைப்பு நடத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை கிராம மக்கள் மேற்கொண்டு வந்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்களிடம் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட சித்தலிங்கமடம் கிராம மக்கள் மறுத்துவிட்ட நிலையில் இது குறித்து தகவலறிந்ததும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக அமைச்சர் பொன்முடி சித்தலிங்கமடம் கிராமத்திற்கு வந்தார்.

  இதையும் படிங்க: அண்ணாமலை சென்னையில் கைது : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் சாலைமறியல்!

  அப்போது திமுக அமைச்சர் பொன்முடியை கொட்டும் மழையிலும் கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அப்போது சாமாதானம் செய்யும் முயற்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

  ஆனாலும் கிராம மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி பொதுமக்களிடம் வாக்குவாததில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதிர் கட்சியினர் இது போன்று போராட்டங்களை தூண்டிவிடுவதாவும், கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தறுவதாகக்கூறிய அமைச்சர் பொன்முடி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    செய்தியாளர் : குணநிதி ஆனந்தன்

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Minister Ponmudi