ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஓசி என பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பொன்முடி...

ஓசி என பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பொன்முடி...

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

முதலமைச்சர் இது போன்று பேச வேண்டாம் என என்னை அறிவுறுத்தியுள்ளார். சகஜமாக பேசிய வார்த்தையை வைத்து கொண்டு அரசியல் செய்கிறார்கள்- பொன்முடி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பேருந்துகளில் பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாக பேசிய பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

  திமுகவின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. வியர்வைக்கு வெகுமதி என்ற தலைப்பில் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தி.க. தலைவர் வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, வாயா போயா என்ற வார்த்தையை சொல்லவே தற்போது பயமாக இருக்கிறது. தலைவர் என்னை பார்த்து அப்படி பேசாதீர்கள் என சொல்லி விட்டார்.பாஜக டார்கெட் செய்து தாக்கி கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் வேறு எதை வைத்து அரசியல் செய்ய முடியும். ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு அரசியல் செய்கிறார்கள்.

  முதலமைச்சர் இது போன்று பேச வேண்டாம் என என்னை அறிவுறுத்தியுள்ளார். சகஜமாக பேசிய வார்த்தையை வைத்து கொண்டு அரசியல் செய்கிறார்கள்.உண்மையில் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

  இதையும் படிங்க: புத்தாண்டு, பொங்கல், தீபாவளி எல்லாம் சண்டே தான்.. 2023-ன் தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்தியாவில் ஒரு கோடி நபர்களை வைத்துள்ள கட்சி 6மாதத்தில் எந்தவித பிரச்சினைகள் இல்லாமல் தேர்தலை நடத்தி தலைவராக தேர்வாவது சாதாரண ஒன்றல்ல. திமுக என்பது கட்சியல்ல , இயக்கம். கொள்கைகளை காப்பாற்றினால் தான் இயக்கம் இருக்கும். இந்த வல்லமை அண்ணா, கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினுக்கு தான் உள்ளது’ என்று தெரிவித்தார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: DMK, Minister Ponmudi, MK Stalin