Home /News /tamil-nadu /

'பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய பெயர்களில் தமிழின் பெருமை' - எதிர்க்கட்சித் தலைவர்களின் பெயர்களை சுட்டிக்காட்டிய அமைச்சர்!

'பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய பெயர்களில் தமிழின் பெருமை' - எதிர்க்கட்சித் தலைவர்களின் பெயர்களை சுட்டிக்காட்டிய அமைச்சர்!

அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

Thangam Tennarasu | சட்டப் பேரவையில் மானியக்கோரிக்கை பதிலுரையில் பேசிய, தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் மொழியின் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சொல்லை தான் நாம் இன்று வரை பயன்படுத்தி வருவதாக கூறினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
தமிழின் ன், ழ சொற்களின் பெருமையை எதிர்கட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பெயரில் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

சட்டப் பேரவையில் மானியக்கோரிக்கை பதிலுரையில் பேசிய, தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் மொழியின் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சொல்லை தான் நாம் இன்று வரை பயன்படுத்தி வருவதாக கூறினார்.

தமிழ் தனித்து இயங்க கூடிய மொழி என்று கூறிய அமைச்சர், உதாரணத்திற்கு "ன் " என்ற எழுத்து அசோக்கனின் பிராமியில் கிடையாது என்றும், ஆனால் கீழடி அகழாய்வில் கிடைத்த தொல்பொருளில் ஆதன் என்ற பெயர் உள்ளது. அதில் "ன் " வருகிறது என்றார். இதனால் அசோகன் காலத்திற்கு முன்பே தமிழில் எழுத்து இருந்ததை காட்டுகிறது என்றார்.

அன்று கிடைத்த " ன் " தான் இன்றைய எதிர் கட்சி துணை தலைவர் பன்னீர்செல்வம் பெயரில் பன்னீரில் " ன் " வருகிறது, அதே போல அவை முன்னவர் பெயரிலும் " ன் " என்றே முடிகிறது. மேலும் முதலமைச்சர் பெயரை உச்சரித்தாலும் இந்த " ன் " வருகிறது இந்த ன் சிறப்பு நம் தமிழுக்கு கிடைத்த பெருமை என்றார்.

அதே போல் தமிழில் பல எழுத்துக்கள் உள்ளது. "ழ" என்ற எழுத்து எந்த மொழியிலும் இல்லை. நம்ம எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பெயரில் " ழ " எழுத்து வருவதாக அமைச்சர் கூறினார். ஆக " ழ " வாக இருந்தாலும் " ன் " ஆக இருந்தாலும் தொடர்ந்து தமிழின் பெருமையாக உள்ளது என்று தமிழின் பெருமை குறிப்பிட்டு பேசினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழணங்கு என்ற பெயரில் ஏ,ஆர்.ரஹ்மான் இசை ஆல்பம் உருவாக்கியுள்ளார். தமிழ் தாய் என்றாலே கலை வடிவமாகத்தான் நமக்கு தோன்றும். இந்த நிலையில், புலியை முறத்தால் துரத்திய புறநானூற்று தாய் போன்ற உருவத்தை வைத்து, அவள் கையில் சூலாயுத்தை கொடுத்து, அதன் உச்சியில் ழ பொறிக்கப்பட்டது என்றால் பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் காலம் வரை ழ வருகிறது என்பது தான் தமிழின் பெருமையை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Also read... சீனா, பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் இன்டர்ன்ஷப் பெறுவதில் சிக்கல்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

இதனை தொடர்ந்து எதிர் கட்சி துணை தலைவர் ஒ.பன்னீர்செல்வம் பேசிய போது, "அமைச்சர் " ன் " எழுத்து இங்கு என் பெயரில் வருவதாக சொன்னார். அவர் பெயரிலும் " ன் " வருகிறது, அந்த பெருமையையும் அவரும் பெற்றுள்ளார் என்றார். மேலும், பேரவை தொடங்கும் போது திருக்குறள் சொல்லப்படுகிறது அதே போல, தமிழ்தாய் வாழ்த்து பாடலாம் என்று எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தனது கோரிக்கை முன்வைத்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: TN Assembly

அடுத்த செய்தி