ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உட்காருடா.. சட்டப்பேரவையில் ஒருமையில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன்: அதிமுக வெளிநடப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

உட்காருடா.. சட்டப்பேரவையில் ஒருமையில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன்: அதிமுக வெளிநடப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது, அதற்குட்பட்டு தான் ஆளுநர் செயல்பட முடியும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சட்டப்பேரவை விவாதத்தின்போது அமைச்சர் பெரியகருப்பணன் ஒருமையில் பேசியதால் அவரை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்ததாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

மாநில பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார். இதை தொடர்ந்து  மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை பேசும்போது, அதிமுகவின் முன்னாள் முதலமைச்சரின் பெயரை குறிப்பிட்டார். முன்னாள் முதலமைச்சரின் பெயரை கூறக்கூடாது என்பது சட்டப்பேரவை விதி என கூறி அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். செல்வப்பெருந்தகையின் அந்த பேச்சை மட்டும் அவக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

எனினும், அதிமுகவினர் தொடர்ந்து கூச்சலிட்டப்படி இருந்தனர். அதிமுக உறுப்பினர்களின் செயல்களை குறிப்பிட்டதோடு, சபாநாயகர் பேச்சை கேட்காததால் அவை காவலர்கள் மூலமாக வெளியேற்றுவதற்கு அவை முன்னவர் துரைமுருகன் வலியுறுத்தினார். இதை தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: துணைவேந்தர் மசோதா: காரசார விவாதங்களுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம்,   ‘சட்டப்பேரவை நடவடிக்கையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்ட போதுஅமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக உட்காருடா என ஒருமையில் பேசினார், அமைச்சர் பெரியகருப்பன் பேச்சை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா குறித்து

பல்வேறு கட்டங்களில் பல்வேறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது, சட்டம் இயற்றப்படவில்லை. சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப

திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி

ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது, அதற்குட்பட்டு தான் ஆளுநரும் செயல்பட முடியும் என்றார்.

மேலும் படிக்க: துணைவேந்தர் நியமனம்.. மாநில அரசை ஆளுநர் மதிப்பதில்லை: மு.க.ஸ்டாலின்

அவரை தொடர்ந்து தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி,  அமைச்சர் உறுப்பினரை கடுமையாக விமர்சிக்கிறார், முதலமைச்சர் அமைச்சரை கட்டுப்படுத்தாமல் ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார், இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என கூறினார்.

First published:

Tags: O Panneerselvam, OPS, TN Assembly