ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதில் முறைகேடா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதில் முறைகேடா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில்

மாதிரி படம்

மாதிரி படம்

கரும்பு கொள்முதல் விவகாரத்தில் திமுக அரசை குறை கூற வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே வழங்குவதாகவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு தமிழ்நாடு கூட்டுறவுதுறை அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இபிஎஸ் வழக்கம்போல், திமுக அரசைக் குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் கரும்பு வழங்கிட வெளியிட்ட அரசாணைகளை இபிஎஸ் முழுமையாகப் படித்தோ அல்லது படித்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், அது பற்றி அறியாமல் அறிக்கை வெளியிடலாமா எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். இபிஎஸ் முதலமைச்சராக இருந்த 2021ம் ஆண்டில், பொங்கலுக்கு கொள்முதல் செய்த கரும்புக்கு 30 ரூபாய் வழங்க ஆணையிடப்பட்டது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், கடந்தாண்டு பொங்கலுக்கு கொள்முதல் செய்த கரும்பிற்கு 33 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டதாகவும், இது அதிமுக அரசு அறிவித்த கொள்முதல் விலையை விட 10சதவீதம் அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2023ம் ஆண்டுக்கும் பொங்கலுக்கு வழங்கப்படவுள்ள முழு நீளக் கரும்பிற்கும் அரசால் 33 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் விலைக்கு குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படக் கூடாது எனவும், கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கரும்புக்கான தொகை செலுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தெளிவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

First published:

Tags: Edappadi Palaniswami, Pongal, Pongal festival, Pongal Gift