• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கார்ப்ரேட் நிறுவனங்கள் நிவாரணப் பணியில் உதவ வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன்

கார்ப்ரேட் நிறுவனங்கள் நிவாரணப் பணியில் உதவ வேண்டும் - அமைச்சர் பாண்டியராஜன்

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Cyclone Gaja | கேரளாவிற்கு பாதிப்பு ஏற்பட்ட போது தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் 100 கோடி அளவுக்கு உதவிகளை செய்தனர். அதை விட உதவிகளை தங்களுடைய மாநிலத்திற்கும் செய்வார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கார்ப்ரேட் நிறுவனங்கள் கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜ‌ன் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை கிண்டியில், சி.ஐ.ஐ., சார்பில் ஐக்கிய நாடுகள் சபையில் உருவாக்கப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருத்தரங்கம் நடந்தது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழில் துறையினர், தன்னார்வளர்கள் பங்கேற்றனர்.

இதில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பங்கேற்று பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கார்ப்ரேட் நிறுவனங்கள் அரசுக்கு உதவி தொகைகளை தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் சுற்றுச்சூழல் பற்றியும் , நிறுவனங்கள் எவ்வாறு முறை சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதை பற்றியும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சுமார் 300 நிறுவனங்கள்  பங்கேற்றன. இதில் ஏற்கனவே சில கார்பரேட் நிறுவனங்கள் புயலால் பாதித்த பகுதிகளுக்கு உதவி உள்ளன. மேலும் சில நிறுவனங்கள் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு உதவு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கேரளாவிற்கு பாதிப்பு ஏற்பட்ட போது தமிழகத்தை சேர்ந்த நிறுவனங்கள் 100 கோடி அளவுக்கு உதவிகளை செய்தனர். அதை விட உதவிகளை தங்களுடைய மாநிலத்திற்கும் செய்வார்கள் என நம்புகிறோம் என்று கூறினார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: