ஸ்டாலின் இருட்டில் சென்று கொண்டிருக்கும் மனிதன் - அமைச்சர் பாண்டியராஜன்

ஸ்டாலின் இருட்டில் சென்று கொண்டிருக்கும் மனிதன் - அமைச்சர் பாண்டியராஜன்

கே. பாண்டியராஜன்

அமைச்சர் பாண்டியராஜன் தமிழ்வழி மென்பொருள் துறையில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

 • Share this:
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருட்டில் சென்று கொண்டிருக்கும் மனிதன் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் விமர்சித்துப் பேசினார்.

  சென்னை முத்தாபுதுப்பேட்டை உள்ள ஆலிம் முகமது கல்லூரியில் தமிழ்வழி மென்பொருள் கல்வி நூலை இணையம் மூலம் அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது. இதில் பாண்டியராஜன் கலந்து கொண்டு இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் தமிழ்வழி மென்பொருள் துறையில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

  மேலும் படிக்க... ஆக்சிஜன் அளவு குறைந்தது: சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், அதிமுக மூன்றாக உடையும் என்ற ஸ்டாலின் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த பேசினார். அப்போது, ‘ஸ்டாலின் இருட்டில் சென்று கொண்டிருக்கும் ஒரு மனிதன் .

  பயம் வரக்கூடாது என்பதற்காக விசில் அடித்துகொண்டே செல்வார்கள் சைக்கிள் ஓட்டுவார்கள். அந்த மாதிரி ஒரு மனநிலையில்தான் உள்ளார் ஸ்டாலின் என நினைக்கிறேன். அவர் இந்த இசையை பாடிக்கொண்டே இருக்கட்டும் அவருடைய பயம் தெளிந்தால் நமக்கு நல்லது என நினைக்கிறேன் என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: