‘பாஜக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார் கமல்ஹாசன்’ - அமைச்சர் பாண்டியராஜன்

மாபா பாண்டியராஜன்

திமுக தேர்தல் அறிக்கை போலி தனத்தின் உச்சம் என்றார் அமைச்சர் பாண்டியராஜன்

 • Share this:
  ஆவடியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக விழாவில் பேசிய அமைச்சர் க.பாண்டியராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாஜக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார் என்று கூறி தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்து பேசினார்.

  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில், ஆவடி சட்டமன்ற வேட்பாளர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிமுக விழா, சுமார் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் 1500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

  விழாவில் அதிமுக பிரமுகர்கள், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளான புரட்சி பாரதம், பாமக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பாண்டியராஜன், திமுக, மக்கள் நீதி மய்யம், மற்றும் அமமுக ஆகிய 3 கட்சியின் தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்த பேசினார். ‘திமுக தேர்தல் அறிக்கை போலி தனத்தின் உச்சம்’ எனவும், 75 சதவீத நிலத்தை விவசாய நிலமாக மாற்றினால், மக்கள் இமயமலையிலும் அமெரிக்காவிலும் சென்று வசிப்பார்களா? என கேள்வி எழுப்பினார்.

  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாஜக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துள்ளார் என்றும் யாருக்கும் புரியாத தேர்தல் அறிக்கை கமலுடையது என்று கூறியதுடன், ‘கமல்ஹாசனின் படம் ஓடவில்லை என்றால் அமெரிக்கா போவேன் என கூறினார். அதே போன்று அமெரிக்க நியாபகத்திலே இருக்கிறார்’ எனவும் விமர்சித்தார். அமுமுக தேர்தல் அறிக்கை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

  Must Read :  இலவச திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் வேலை - டிடிவி தினகரன்

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் நடைபெற உள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகின்றது. அரசியல் வாதிகள், மாற்று கட்சியினரை விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
  Published by:Suresh V
  First published: