எம்ஜிஆர் ஆட்சியை முதல்வர் பழனிச்சாமியால் மட்டுமே தர முடியும்: அமைச்சர் பாண்டியராஜன்

அமைச்சர் பாண்டியராஜன்

எம்ஜிஆர் ஆட்சியை முதல்வர் பழனிச்சாமியால் மட்டுமே தர முடியும் என்று  அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். 

 • Share this:
  சர்வதேச மனித உரிமைகள் தின விழிப்புணர்வு கூட்டம் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில்  நடைபெற்றது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ புரட்சித்தலைவர் ஆட்சியை தர போகிறோம் என யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்கள் எல்லோரும் அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். எம்ஜிஆர் ஆட்சியை முதல்வர் பழனிசாமி மட்டுமே தர முடியும் சிலர் தலைவரின் வாரிசு என்று கூறுவது எதற்கும் ஒவ்வாத விஷயம், இயக்கத்தின் ஆன்மா எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும்தான் என்றார்.

  அதிமுக பொதுக்குழு கூட்டம்- விரைவில் தேதி அறிவிப்பு

  தொடர்ந்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், ”அதிமுக அரசின் கஜானா காலியாகி விட்டது என்று திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் கூறினார்கள். ஆனால் இப்போது 5000 கோடி ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் வலிமைப்படுத்தப்பட்ட அரசாக உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு பணம் கொடுப்பது ஏன் என்று சொல்லும் எதிர்க்கட்சிகள் கொரோனா காலத்தில் 5000 கொடுங்கள் என்று கூறினார்கள். தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற எண்ணம் இந்த கட்சிகளுக்கு வந்து விட்டது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க அரசு பணம் தருகிறது. கொள்ளை அடித்த பணத்தில் திமுகவும் கட்சி ரீதியாக மக்களுக்கு பணம் கொடுக்கலாம் என்று அறிவிக்கலாம்” என்றார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: