அரசு பணிகள் தாமதம்.. கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் பாண்டியராஜன்

அமைச்சர் மா.பாண்டியராஜன் (கோப்புப் படம்)

தாமதமாக உள்ள பணிகள் அனைத்தையும் வேகப்படுத்த வேண்டும் என்கிற அளவில் கமலின் இந்த கருத்தை  நங்கள் எடுத்து கொள்கிறோம் எனவும் ஆனால் எங்களைப் பொருத்தவரை எங்கள் எண்ணத்தில் பழுதில்லை என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

 • Share this:
  அரசு பணிகள் தாமதமாக உள்ளதென மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் பாண்டியராஜன் பதிலளித்துள்ளார். அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில்  வரும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்து செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் தேர்தல் பொறுப்பாளர் கமலகண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்டசெயலாளர் வி.அலெக்சாண்டர்  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலகண்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  மேலும் படிக்க...கோவை:100 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை அபகரிக்க முயன்ற மருத்துவர் கைது

  அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன்,  மழைநீர் கால்வாய்கள் மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டிருப்பது நிஜம். அங்கு நடந்தது ஒரு விபத்து. அந்த இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தேன்.

  மதுரவாயல் பைபாஸ் சாலையில் 9 அடி ஆழத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில் மழை நீர் தேங்கி நின்றதால், அது தெரியாமல்  பைக்கில் வந்த இருவரும் இறந்திருக்கிறார்கள். இனி ஒருமுறை இதுபோல் நடக்காமல் இருக்க அரசு உடனடியாக கால்வாய்களை மூட உத்தரவிட்டு இருக்கிறது” என்று கூறினார்.

  அதன் பின்னர், இந்தியப் பெண்களுக்கு கழிவறை வசதி 73 ஆண்டுகளாகத் தீராத பிரச்சனை, அரசு ஊழியர் சரண்யா செப்டிக் டேங்கில் உயிரிழந்தது தேசிய அவமானம் என  கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதை  கேள்வியாக கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் பாண்டியராஜன், “ எங்கெல்லாம் பெண்களுக்கு பொதுக்கழிப்பிடம் தனியாக இல்லையோ அங்கெல்லாம் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.  பெண்களுக்கு என தனியாக உள்ள கழிவறைகளை மேம்படுத்தவும் கார்ப்பரேஷன் மூலம் வசதி செய்யப்படும் எனவும், பயோ கழிவறைகளை அமைக்க ஏற்படுத்தப்படும்“ எனவும் தெரிவித்தார்.

  மேலும், தொடர்ந்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “தாமதமாக உள்ள பணிகளை அனைத்தையும் வேகப்படுத்த வேண்டும் என்கிற அளவில் கமலுடைய இந்த கருத்தை  நங்கள் எடுத்து கொள்கிறோம். ஆனால் எங்களைப் பொருத்தவரை எங்கள் எண்ணத்தில் பழுதில்லை. செயல்பாட்டை வேகப்படுத்த ஏற்பாடு செய்து விடுகிறோம். கண்டிப்பாக இன்னொரு முறை இதுபோல்  ட்விட் பதிவிடும் வாய்ப்பை நாங்கள் தர மாட்டோம்” என்று கூறினார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: