அதிமுக யார் பிடியிலும் இல்லை... அன்புப் பிடியில்தான் உள்ளது - அமைச்சர் பாண்டியராஜன்

அமைச்சர் பாண்டியராஜன்

கூட்டணிக்கு தலைமை தாங்குவது அதிமுக, முக்கிய அங்கம் வகிக்கும் கட்சி பாஜக, யாரும் யார் பிடியிலும் இல்லை. அன்புப் பிடியில் இருக்கலாமே தவிர ஆக்கிரமிப்பு பிடியில் யாரும் இல்லை.

 • Share this:
  அதிமுக யார் பிடியிலும் இல்லை என்றும் அது அன்புப் பிடியில் இருக்கலாமே தவிர ஆக்கிரமிப்பு பிடியில் யாரும் இல்லை எனவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

  ஆவடி சட்டமன்ற தொகுதி, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சிறப்பு சாலை திட்டப்பணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட பணிக்கான பூமி பூஜைகள் நடைபெற்றன.

  இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு பணிகளுக்கான பூமி பூஜைகளை செய்து வைத்தார்.

  இதனைத் தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில், “நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் தீர்மானம் நிறைவேற்றி அறிவிப்பட்டது அதை உச்சநீதிமன்றம்  அங்கீகரித்துள்ளது.  இதன் பிறகு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது முறையற்றது என்று நாங்கள் நினைக்கிறோம்,

  எங்கள் கூட்டணி நல்ல கூட்டணி, சென்றமுறை இருந்த அதே கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்து வருகிறது. அதில் முக்கியமான அங்கம் பாரதிய ஜனதா கட்சி, இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குவது அதிமுக, யாரும் யார் பிடியிலும் இல்லை, அன்புப் பிடியில் இருக்கலாமே தவிர ஆக்கிரமிப்பு பிடியில் யாரும் இல்லை.

  கொள்கை வேறு, கூட்டணி வேறு நாங்கள் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளின் அடிப்படையில் மக்களை சந்திக்க போகிறோம்.

  அதிமுகவை மீட்டெடுப்போம் என தினகரன் கூறி வருகிறார் முதலில் அவர்களது கட்சியை வலுப்படுத்த ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும். பாதிப்பேர் அந்த கட்சியில் இருந்து விலகி இங்கு இணைந்து விட்டனர். அமமுக தொண்டர்கள் அனைவரும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இனைய தயாராகிவிட்டனர்.

  Must Read : அதிமுக பொதுக்குழு கூட்ட விவகாரம்: சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தேதி வெளியானது

   

  கூட்டணி அறிவித்த பிறகு யாருக்கு எத்தனை சீட் என்பது வெகு விரைவில் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்”  இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: