விபத்தில் சிக்கிய வாலிபரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய அமைச்சர்...

அமைச்சர் பாண்டியராஜன்

காயமடைந்த அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர் பாண்டியராஜன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

  • Share this:
திருவேற்காட்டில் விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிரை காப்பாற்றிய அமைச்சரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

சென்னை அடுத்த திருவேற்காடு, நூம்பல் பகுதியில் உள்ள கோவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அமைச்சர் பாண்டியராஜன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஓடியதால் நிலைதடுமாறி அந்த வாலிபர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.இதனை கண்டதும், தனது காரை நிறுத்திய அமைச்சர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதால் நேரடியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து புகார் தெரிவித்தார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது.இதையடுத்து, காயமடைந்த அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர் பாண்டியராஜன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வாலிபரை உரிய நேரத்தில் காப்பாற்றிய அமைச்சரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Also Watch:48 நாட்கள் வீட்டுச் சிறையில் இருந்து சுதந்திரம் பெற்ற காஞ்சி மக்கள்...

Published by:Anand Kumar
First published: