Home /News /tamil-nadu /

மதப் பிரச்சனையால் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வர ஐ.டி நிறுவனங்கள் விரும்புகின்றன- அமைச்சர் பி.டி.ஆர்

மதப் பிரச்சனையால் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வர ஐ.டி நிறுவனங்கள் விரும்புகின்றன- அமைச்சர் பி.டி.ஆர்

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

கர்நாடகாவிலிருந்து ஏராளமான ஐ.டி நிறுவனங்கள் தமிழ்நாடு வருவதற்கு ஆர்வம் காட்டுகின்றன என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு உலகம் முழுவதிலிலுமிருந்து முதலீட்டை ஈர்ப்பதில் தீவிரமாக உள்ளது. கர்நாடகாவில் அதிகரித்துவரும் மதப் பிரச்சனை காரணமாக அங்கிருந்து வெளியேற நினைக்கும் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் அவர்கள் தொழில்களைத் தொடங்குவதை விரும்புகிறோம்.

    கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்வுகளை தமிழ்நாடு தீவிரமாக கவனித்துவருகிறது. ஐ.டி நிறுவனங்கள் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டு வருவதற்கு பெரும் ஆர்வத்தைக் காட்டிவருகின்றன. நாங்கள் ஏற்கெனவே இந்தப் போட்டியில் உள்ளோம். தமிழ்நாடு 53 சதவீதம் அதிக முதலீட்டைச் சந்தித்துள்ளது. முதலீட்டாளர்களையும், கார்பரேட் நிறுவனங்களையும் கவரும் வகையில் அடுத்து வரவுள்ள ஆறு மாதங்களில் பல்வேறு நாடுகளில் பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

    துபாயை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

    தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் தீவிர இந்துத்துவா வடிவம் எடுப்பது மிகவும் கடினம். ஏனென்றால் தமிழ்நாட்டில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே மதம் ஜனநாயகமயமாகிவிட்டது. தமிழ்நாட்டின் அடிப்படை மதிப்பீட்டை எந்தவகையான தீவிரவாதத்தாலும் பாழ்படுத்த முடியாது. ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தி மத்திய அரசு அதனுடைய அதிகாரத்தை அதிகரிப்பதால் நாட்டில் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Minister Palanivel Thiagarajan

    அடுத்த செய்தி