முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தாலிக்குத் தங்கம் திட்டம் 4 வருடங்களாக பெயரளவில் மட்டுமே இருந்தது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தாலிக்குத் தங்கம் திட்டம் 4 வருடங்களாக பெயரளவில் மட்டுமே இருந்தது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தாலிக்குத் தங்கம் திட்டம் 4 வருடங்களாக பெயரளவில் மட்டுமே இருந்தது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தாலிக்குத் தங்கம் திட்டம் நான்கு வருடங்களாக பெயரளவில் மட்டுமே இருந்தது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :

தமிழக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக் கிழமை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. அதில் முக்கியமாக தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.

இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார். இந்தத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பு கிடைத்தது. அதேநேரத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது பலரும் அதிருப்தி தெரிவித்தனர். அந்தத் திட்டத்தையும் தொடர வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.

பயணங்களின்போது கழிவறை இல்லாமல் சிரமப்பட்டுள்ளேன்- சென்னை மாநகராட்சியின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அழைக்கும் கிருத்திகா உதயநிதி

இந்தநிலையில், இதுகுறித்து மதுரையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய பழனிவேல் தியாகராஜன், ‘தாலிக்குத் தங்கம் திட்டம் நான்கு வருடங்களாக பெயரளவுக்கு மட்டுமே இருந்தது. செயலளவில் இல்லை. அதனை திருத்த வேண்டிய அவசியம் இருந்தது. காலத்துக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும்.

பெண்களுக்கு பயன்படும் வகையில் மாற்ற வேண்டும் என்பதற்காகவே தாலிக்குத் தங்கம் திட்டம் கல்வித் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுக்கும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது’என்று தெரிவித்தார்.

First published:

Tags: Gold, Minister Palanivel Thiagarajan