தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை: நடவடிக்கை எடுக்கப்படும் - நிதியமைச்சர் பி.டி.ஆர் உறுதி

பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

 • Share this:
  தமிழ்நாட்டில் எதன் அடிப்படையில் வெளிமாநிலத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக
  நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் நீட் தேர்வு காரணமாக அனிதா மட்டுமல்லாமல் மேலும் பல குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும், அதனை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி
  குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

  ஒருவேளை முடியாத பட்சத்தில் நீட் தேர்வை மத்திய அரசு திணித்தால், தேர்வெழுத செல்லும் மாணவிகளை,
  பூ வைக்க கூடாது, பொட்டு வைக்க கூடாது என இழிவு படுத்தும் நிகழ்வு தவிர்க்கப்பட வேண்டும் எனவும் வேல்முருகன் வலியுறுத்தினார். 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் எப்படி வந்தது என்பதை ஆராய குழு அமைக்க வேண்டும் எனவும் வேல்முருகன் கோரிக்கை விடுத்தார்,

  அதற்கு பதிலளித்து பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘கடந்த10 ஆண்டுகளில் எந்த சட்டத்தின் அடிப்படையில், எந்த வழிமுறைகளை மாற்றியமைத்து தமிழர்களை தவிற வேற மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்ட்டது என ஆய்வு செய்து அதை தவிர்ப்தற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் வெள்ளை அறிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான ஆவணங்களை தன்னிடம் வழங்கினால் அதுவும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: