ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கு: பாஜகவினருக்கான நிபந்தனை ஜாமீனில் மாற்றம்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கு: பாஜகவினருக்கான நிபந்தனை ஜாமீனில் மாற்றம்

அமைச்சர் கார் மீது தாக்குதல்

அமைச்சர் கார் மீது தாக்குதல்

சேலம் மாவட்டத்தில் தங்கி இருந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றி அமைக்க வேண்டும் என்று மேற்கண்ட 3 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய் திருந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் முன் ஜாமீன் பெற்ற பாஜகவை சேர்ந்த மூன்று பேரும் மதுரை வாடிப்பட்டி நீதிமன்றத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை டி. புதுப்பட்டி லட்சுமணனின் உடலுக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாவட்ட துணைத்தலைவர் உள்பட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குமார், பாலா, கோபிநாத், ஜெயகிருஷ்ணன், கோபிநாத், முகமது யாகூப், ஜெயவேல் ஆகிய 7 பேரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமின் வழங்க கோரி, பாஜகவை சேர்ந்த மதுரை விளாங்குடியை சேர்ந்த வேங்கை மாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மதுரை மானகிரியை சேர்ந்த கோகுல் அஜித் ஆகிய 3 பேர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி G.இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சேலத்தில் தங்கி சேலம் மாவட்டம் ஜூடிசியல் நீதிமன்றத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில், தற்போது சேலம் மாவட்டத்தில் தங்கி இருந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றி அமைக்க வேண்டும் என்று மேற்கண்ட 3 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய் திருந்தனர்.

இதையும் படிங்க: ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் நிலைதடுமாறிய வாகனம்... அமைச்சர், கலெக்டர் தப்பினர்... சினிமா காட்சிபோல் திக் திக் நிமிடங்கள்...

இந்த மனு நீதிபதி A.A. நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில், சேலத்தில் தங்கி இருந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே நிபந்தனையை மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதி, மனுதாரர்கள் 3 பேரும் சேலத்தில் தங்கி இருந்து கீழமை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் நாள் தோறும் கையெழுத்திட உத்தரவிட்டார்.

Published by:Arunkumar A
First published:

Tags: BJP, Madurai High Court, Minister Palanivel Thiagarajan