முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் பிடிஆர்

அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் பிடிஆர்

பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்

Minister Palanivel Thiagarajan | தமிழ்நாட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கினால் பணி ஆணை பெற்றதிலிருந்து ஓராண்டிற்கு பணியிடை மாறுதல் செய்ய கூடாது,

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அரசு ஊழியருக்கு பதவி உயர்வு கிடைத்தால் அவர் அதே அலுவலகத்தில் பணியாற்றக் கூடாது ஆனால் அவை தமிழகத்தில் பின்பற்றபடுவதே கிடையாது அவற்றை இந்த அரசு கலையுமென  அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரயைில் கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கருவூலத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரித்து காணப்படுவதாகவும், மாவட்ட சார் கரூவூல கணக்கு அலுவலத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய கணக்கும், 7லட்சம் ஓய்வூதியதார்களுக்கும் கணக்கு வழக்கு பார்ப்பதாகவும், ஊழியர்கள் பற்றாகுறையை தீர்க்க அரசு நடவடிக்கைகள் எடுக்க்க வேண்டுமெனவும், தமிழகம் முழுவதும் 243 அலுவலகமும் இதே நிலை நீடிக்கிறது அரசு தீர்வு கான கோரினார்,

இதற்க்கு பதில் அளித்த நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வானையத்தால் தேர்வு நடத்துவதில் பல பிரச்சினைகள் இருபதாகவும், நீதிமன்றம், கொரோனா என பல தேர்வுகள் தள்ளிபோய்யிருலதால் தான் காலி பணியிடங்கள் அதிகரித்தற்க்கு காரணம் என்றார். மனித வளமேம்பாட்டு துறை சார்பில் அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வது, அரசானை அமல்படுத்தபடுவது, சான்றிதழ் சரிபார்பது என அனைத்தையும் குழு அமைத்து ஆய்வு செய்யபட்டு வருகிறது.

Also Read : ஊ சொல்றியா.. ஊ ஊ சொல்றியா... ஆலுமா டோலுமா.. என்ன பாட்டு இதெல்லாம்... சட்டசபையில் நயினார் நாகேந்திரன் காட்டம்

தமிழ்நாட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கினால் பணி ஆணை பெற்றதிலிருந்து ஓராண்டிற்கு பணியிடை மாறுதல் செய்ய கூடாது, ஒரு அரசு ஊழியர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற கூடாது, அங்கேயே பணியாற்றினால் அங்கு பிரச்சினைகள் ஏற்படும், பணியின் நிமித்தமாக பதவி உயர்வு பெற்றால் அந்த அதிகாரி வேறு இடத்திற்க்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் இல்லையென்றால் அவர் மீது உள்ள புகாரை அவரே விசாரிக்கும் நிலையேற்படும்.

இவை எல்லாம் தமிழ் நாட்டில் சரியாக பின்பற்றபடுவது கிடையாது, ஆகவே இதை கலையவே மனிதவள மேம்பாடு மையம் குழு அமைத்து சீர்திருத்தம் செய்து வருவதாகவும், விரைவில் காலிபணியிடங்கள் நிரப்படுமென அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

First published:

Tags: DMK, Minister Palanivel Thiagarajan, TN Assembly