எஸ்.பி.வேலுமணிக்கு அடுத்து ஜெயகுமார் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் பரபரப்பு தகவல்

அமைச்சர் நாசர்

தவறு இல்லை என்றால், நிரூபித்து வெளியே வரட்டும். அவர்கள், முறைகேடாக பல்லாயிரம் கோடி ரூபாய் சேர்த்துள்ளனர்.

 • Share this:
  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தொடர்ந்து, ஜெயகுமார் மீதும் நடவடிக்கை பாயும் என பால் வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

  தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவையின், 2ஆம் ஆண்டு விழாவை ஒட்டி, சென்னை வளசரவாக்கத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ஏழை எளியோருக்கு, ஐந்து கிலோ அரிசி மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நேற்று நடந்தது.இந்நிகழ்ச்சியில், தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி, தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை தலைவர் ஜோதிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது, வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு அறிவுறுத்தினோம். ஆனால், அதை, அதிமுக அரசு மறுத்தது. தற்போது, வெளிப்படை தன்மையுடன் ஆட்சி செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

  இதற்கு, அனைத்து மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை அடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீதும் நடவடிக்கை பாயும். அவர்கள் மீது தவறு இல்லை என்றால், நிரூபித்து வெளியே வரட்டும். அவர்கள், முறைகேடாக பல்லாயிரம் கோடி ரூபாய் சேர்த்துள்ளனர், அதனால்தான் அவர்கள் பதறுகின்றனர்.

  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் ஆவின் ஸ்வீட் எடுத்துச் சென்ற விவகாரம் குறித்து, முறையான விசாரணை நடந்து வருகிறது. அதிமுக அரசு கட்ந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை கடனில் தள்ளி விட்டுள்ளது.

  Must Read : உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் - வேலுமணியை விமர்சிக்கும் அமைச்சர் சேகர் பாபு

  விவசாயியிடம் ஒரு லிட்டர் பால் 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறோம். அதை, 42 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதில், மொத்த வியாபாரிகளுக்கு லிட்டருக்கு, 1.50 ரூபாயும், சில்லரை வியாபாரிகளுக்கு, 75 காசும் அளிக்கிறோம். தற்போது, 80 ஆயிரம் போலி பால் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்று கூறினார் அமைச்சர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: