கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஆலம் பவுண்டேஷன் சார்பில் மருத்துவனைக்கு தேவையான கட்டில், மெத்தை, சக்கர நாற்காலி, பல்ஸ்ஆக்ஸி மீட்டர் உள்ளிட்ட உபகரனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்சியில் தமிழக வீட்டுவசதிதுறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கட்டில், மெத்தை, சக்கர நாற்காலி, பல்ஸ்ஆக்ஸி மீட்டர் உள்ளிட்டவற்றை மருத்துமனை அலுவலர்களிடம் வழங்கினார். தொடந்து மருத்துவமனையில் படுக்கை வசதிகள் குறித்தும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவ அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் முத்துசாமி, “ஈரோடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்யபட்டுள்ளது. இனி ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் முத்துச்சாமி
கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி, அந்தியூர் அரசு மருத்துவமனைகளில் 100 முதல் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்ப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆரம்பகட்ட கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பள்ளி கல்லுரிகளில் 3,500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, பொதுமக்களுக்கு
கொரோனா அறிகுறி இருந்தால் தாமாக முன்வர வேண்டும் எனவும் சிகிச்சை முடியும் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.
Must Read : ஒருவருக்கு இரு வேறு தடுப்பூசி போடுவது ஆபத்தா? மத்திய அரசு விளக்கம்
ஈரோடு மாவட்டத்தில்
கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டு பெருந்துறை மருத்துக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,
கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக 10 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.