ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அபராதம்- முதன்மைச் செயலாளருக்கு பரிந்துரை

விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அபராதம்- முதன்மைச் செயலாளருக்கு பரிந்துரை

அமைச்சர் முத்துசாமி

அமைச்சர் முத்துசாமி

தமிழ்நாடு முழுவதும் பல கட்டிடங்கள் வரன்முறை இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக சுட்டி காட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அபராதம் விதிக்க வீட்டுவசதித்துறையின் முதன்மைச் செயலாளருக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல கட்டிடங்கள் வரன்முறை இல்லாமல் கட்டப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு வரன்முறை திட்டத்தின் முக்கியத்துவத்தை பெரிய அளவில் கொண்டு போய் சேர்க்க வேண்டி உள்ளது என்றும் கட்டட அனுமதி இல்லாமல் பல கட்டிடங்கள் மிக நீண்ட நாட்களாக உள்ளதால் அதற்கு தற்போது உள்ள விதிகளின்படி தீர்வை ஏற்படுத்திவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் அனைத்து கோவில்களில் செல்போன் பயன்படுத்த தடை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 இந்த நிலையில் தமிழ்நாட்டில் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வீட்டுவசதித்துறையின் முதன்மைச் செயலாளருக்கு அமைச்சர் முத்துச்சாமி கடிதம் எழுதி இருப்பது தெரியவந்துள்ளது.

First published:

Tags: Tamilnadu government