ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பருவ மழைக்காலங்களில் வைரஸ் காய்ச்சல்கள் அதிகம் பரவுவது வழக்கம். அக்டோபர் மாதம் தொடங்கும் இந்த காய்ச்சல் சீசன், ஜனவரி மாதம் வரை நீடிக்கும். ஆனால் நடப்பாண்டு மார்ச் மாதம் ஆகியும் காய்ச்சல் பாதிப்புகள் குறையவில்லை. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை தமிழ்நாடு அரசு நடத்தியது. அந்த வகையில். சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க; ஒரே ஒரு ரயில் பாதைக்காக பிரிட்டிஷாருக்கு பணம் செலுத்தும் இந்திய அரசு... ஏன் தெரியுமா?
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை முழுவதும் 200 இடங்களிலும், தமிழ்நாடு முழுவதும் 800 இடங்களிலும் இந்த முகாம் நடைபெறுவதாக கூறினார். H3N2 வகை வைரஸ் காய்ச்சல் பரவும் தன்மை கொண்டதால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக அமைச்சர் கூறினார்.
இதனிடையே, H3N2 இன்ப்ளூயன்சா வைரஸ் காய்ச்சலால் கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 90 பேர் H3N2 இன்ப்ளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.