சம்பா, தாளடி நெற்பயிர்களை காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு கூடுதலாக 15 நாட்கல் அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டமானது (Pradhan Mantri Fasal Bima Yojana) எதிர்பாராது நிகழும் இயற்கைப் பேரிடர்களினால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்க இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா/ தாளடி/ பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்துகிறது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூ, திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு நாளையே (நவம்பர் 15,2021) கடைசி நாளாகும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை இடர்பாடு காரணமாக காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் 25 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 10 லட்சம் விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல்லை பயிரிடுகின்றனர். இந்த ஆண்டில்இதுவரை 12 லட்சம் ஏக்கர் நிலம் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 8.75 லட்சம் விவசாயிகள் மட்டுமே பெயர் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு தினங்களுக்கு மிக கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
காப்பீட்டில் பதிவு செய்யும் நடவடிக்கை செப்டம்பர் 15ம் தேதி தொடங்கிய நிலையில், விவசாயிகள் பலரால் பொதுசேவை மையம் மற்றும்நிதி நிறுவனங்களின் சேவையை தொடர்ந்து பெற முடியவில்லை. ஏனென்றால் நவராத்திரி, தீபாவளி, போன்ற பண்டிகைகளின் விடுமுறை, வடகிழக்கு பருவமழை போன்றவற்றல் அதற்கான சேவையை விவசாயிகள் தொடர்ந்து பெற முடியாமல் போய்விட்டது.
எனவே, பதிவுக்கான இறுதி தேதியை நவம்பர் 30ம் தேதிக்கு காலநீட்டிப்பு செய்ய வேண்டும். இது மேலும் பல விவசாயிகளை ப்யிர் காப்பீடு செய்வதற்கான வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பயிர் காப்பீடு செய்வதற்கு நாளை கடைசி நாள்.. உடனே பதிவு செய்யுங்கள்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.