Home /News /tamil-nadu /

விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு பட்ஜெட்டில் விடை கிடைக்கும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு பட்ஜெட்டில் விடை கிடைக்கும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

MRK Panneerselvam : தமிழகத்தில் 6 லட்சம் ஏக்கர் கூடுதலாக இந்த ஆண்டு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாவும், விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு பட்ஜெட்டில் விடை கிடைக்கும் எனவும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
வேளாண் பட்ஜெட் வரும் சனிக்கிழமை தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மாநில அளவிலான விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் , சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் இயக்குநராக அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பாக இதுவரை 250 க்கு மேற்பட்ட விவசாயிகளிடம் நேரடியாக கருத்து கேட்கப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களின் தாக்கமாக தான் இந்த வேளாண் பட்ஜெட் அமையும் என தெரிவித்தார்.

மேலும் பயிர் சாகுபடி இந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கர் கூடுதலாக செய்யபட்டுள்ளதாகவும், 53 லட்சம் ஏக்கள் நெல் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 114 லட்சத்து 24 ஆயிரம் ஏக்கர் பயிர் சாகுபடி தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Must Read : “ஆபத்து என்றால் திமுககாரன் ஓடிவருவான் என நம்பி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கரும்பு கொள்முதல் விலை உயர்த்தி கொடுத்ததையொட்டி கரும்பு சாகுபடி அதிகரித்துள்ளது. பருவ  மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நஷ்ட ஈடு தொகை வழங்கப்பட்டுவிட்டதாகவும், விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு வேளாண் பட்ஜெட்டில் விடை கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
Published by:Suresh V
First published:

Tags: DMK, Farmers, TN Budget 2022

அடுத்த செய்தி