ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''மகளிர் சுய உதவி குழு கடன் விரைவில் தள்ளுபடி'' - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

''மகளிர் சுய உதவி குழு கடன் விரைவில் தள்ளுபடி'' - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

பயிர்காப்பீடு செய்ய திங்கட்கிழமை கடைசி நாள் என்பதால் விடுபட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - அமைச்சர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Cuddalore, India

  மழை வெள்ளத்தால் விளைநிலைங்களில் 33% மேல் பாதிப்பு இருந்தால் நிவாரணம் அளிக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கொட்டிய கனமழையால் பாதிக்கப்பட்ட, விளைநிலங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

  மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.75 கோடி கடன் தள்ளுபடி தயார் நிலையில் உள்ளது எனவும் அது விரைவில் தள்ளுபடி செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.

  மேலும் பயிர்காப்பீடு செய்ய திங்கட்கிழமை கடைசி நாள் என்பதால் விடுபட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டு 20% விவசாயிகள் கூடுதலாக காப்பீடு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

  'பொறுமையை சோதிக்கும்.. மழை வெளுக்கும்' கனமழை குறித்து அலெர்ட் கொடுத்த வெதர்மேன்! 

  தொடர்ந்து பேசிய அவர், கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பிறகு நிவாரணம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Agriculture, Heavy Rainfall