தமிழக அரசு பத்திரிக்கையாளர் நல வாரியத்திற்கு உறுப்பினர்களை நியமனம் செய்துள்ளதாகவும், நல வாரியம் விரைவில் முழு செயல்பாட்டிற்கு வரும் என செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் அன்னூர், மூப்பேரிபாளையம் பேரூராட்சிகள், சூலூர் விமானப்படைத் தளம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி, பல்லடம் மற்றும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 155 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது241 கோடி மதிப்பில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் இன்று துவங்கப்பபட்டுள்ளது எனவும், இது 4.20 லட்சம் மக்களுக்கு பயன்படுஙதுடன், 2035 ம் ஆண்டு வரை இந்த திட்டத்தை நம்பியுள்ள மக்களுக்கு பயன்படும் எனவும் தெரிவித்தார்.
Also read... நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட தண்டனையில் இருந்து தப்ப முடியாது - நீதிமன்றம் எச்சரிக்கை!
RNI வாங்கி கொண்டு பத்திரிகையாளர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருக்கும் பத்திரிகை நிறுவனங்கள் குறித்து எழுத்து பூர்வமாக புகார்கள் வரும் போது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், பத்திரிக்கையாளர் நல வாரியம் தமிழக அரசால் துவங்கி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் நல வாரியம் விரைவில் முழு செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.
ஆன் லைன் மீடியாக்களை முறைபடுத்துவது குறித்து தனி நபர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் எனவும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.