Home /News /tamil-nadu /

Corona Virus | அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று - மருத்துவமனையில் அனுமதி

Corona Virus | அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று - மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின், உதவியாளர் செல்லமுத்து. இவர் அமைச்சருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு செல்லமுத்துவுக்கு சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    இந்த நிலையில் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    செல்லமுத்து அமைச்சருடன் நேரடி அலுவலகத் தொடர்பில் இருந்ததால், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனும் கடந்த 14-ம் தேதி இரவு கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

    இதையும் படிங்க: பெண்ணின் உயிரைப் பறித்த கள்ளக்காதல்.. - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

    இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து,  அமைச்சரின் பிற உதவியாளர்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் எனப் பலருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக, அமைச்சர் அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    Also read: திண்டுக்கல்லில் பள்ளி மாணவி எரித்துக்கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி