டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் அணிவகுப்பு மரியாதையில் தமிழகத்தை சேர்ந்த தேசிய மாணவர் படையினர் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பாராட்டு விழா சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. மெய்யநாதன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் செயலர் அபூர்வா உள்ளிட்டோர் பங்கேற்று வீரர்களை பாராட்டினர்.
இந்நிலையில், சிறப்பாக செயல்பட்ட குழுவிற்கு 2.27 லட்சம் ரூபாய் சிறப்பு பரிசாக தமிழக அரசு வழங்கியது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சி.வி.மெய்யநாதன், தமிழக தேசிய மாணவர் படை வீரர்கள் தேசிய அளவில் 4ஆம் இடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மாணவர் படையினருக்கு தேவையான உட்கட்டமைப்பு பணிகள், அதிகபடுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய மாணவர் படையினர் பயிற்சி பெற மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு 1.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயிற்சி பெற மையம் செயல்பட்டு வருகிறது. அங்கே, தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். சீனியர் மகளிர் கால்பந்தாட்ட அணி வெற்றி பெற்றதற்காக பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது அது விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், ஒலிம்பிக் அகாடமிகள் 4 மண்டலங்களில் துவங்க, அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் விளையாட்டுத் துறை சார்பில் நடைபெற்று வருகிறது. தமிழக விளையாட்டு வீரர்களுக்கான குறைகள் ஏதேனும் உள்ளதா என்பதை தெரிவிப்பதற்கான தகவல் மையம் விரைவில் துவங்கப்படும் என்றார்.
மேலும், திமுக ஆட்சியமைத்த மே 7க்கு பிறகு தமிழகத்தில் மண்ணை மலடாக்கும் திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும், அவ்வாறு அனுமதி கேட்டு வந்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். மேலும், இதற்கு அனுமதி ஏதேனும் வழங்கப்பட்டிருந்தால், துவக்க நிலையிலேயே தடுத்து நிறுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
டெல்டா மாவட்டங்களை கண்ணின் இமைபோல பாதுகாப்பேன் என முதலமைச்சர் தெரிவித்தார். அதுபோல கண்ணின் இமை போல காப்போம் என சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதியளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Hydrocarbon Project, Neutrino Project