முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிறுவனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த அமைச்சர்... புகாரை வாபஸ் பெற குடும்பத்தினர் முடிவு...!

சிறுவனை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த அமைச்சர்... புகாரை வாபஸ் பெற குடும்பத்தினர் முடிவு...!

அமைச்சர் திண்டுகள் சீனிவாசன்

அமைச்சர் திண்டுகள் சீனிவாசன்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நீலகிரியில் பழங்குடியின சிறுவனை அழைத்து தனது செருப்பைக் கழற்றச் சொன்ன அமைச்சரின் செயல், சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று சிறுவனின் குடும்பத்தினரை நேரில் அழைத்து வருத்தம் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாமை நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவைத்தார். பின்னர் அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்ற அவர், அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடியின சிறுவனை “டேய் வாடா” என்று அழைத்து தனது செருப்பைக் கழற்றச்சொன்னார்.

இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், அமைச்சருக்கு கண்டனங்கள் குவிந்தன. இதனை அடுத்து, அந்த சிறுவன் தனது பேரன் மாதிரி என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே, சிறுவன் அமைச்சர் மீது மசினக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், சிறுவன் மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் அழைத்து அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, அமைச்சர் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக சிறுவனின் தாயார் கூறியுள்ளார்.

First published:

Tags: Dindigal Sreenivasan