• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பஞ்சு மிட்டாய் சாப்பிட்டவாறு ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்

பஞ்சு மிட்டாய் சாப்பிட்டவாறு ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்

அமைச்சர் மதிவேந்தன்

அமைச்சர் மதிவேந்தன்

பூம்புகார் , பிச்சாவரம் சுற்றுலாதலங்கள் மேம்படுத்தபடும், தடைபட்டுள்ள இந்திர விழா நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

  • Share this:
பூம்புகார், பிச்சாவரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பூம்புகார் சுற்றுலாத்தலம் மேம்படுத்தபடும் என்றும் தடைபட்டுள்ள பாரம்பரிய இந்திர விழா நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கடலூர் மாவட்டம் பிச்சாவரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, பிச்சாவரம் அலையாத்தி காடுகள் மற்றும் பூம்புகார் கலைக்கூடம், பாவைமன்றம், நிலாமுற்றம், பளிங்கு மண்டபம், சங்கு மற்றும் சிப்பி விடுதி, காவிரி சங்கமம்  உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பூம்புகார் சுற்றுலாத்தலத்தை ஆய்வு மேற்கொண்ட போது, அமைச்சர் கடற்கரையோரம் சென்று அங்கு விற்பனை செய்த பஞ்சு மிட்டாயை வாங்கி சுவைத்தவாறு அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், கடந்த 10 ஆண்டுகளாக பூம்புகாரில் எந்த சீரமைப்பு பணிகளும் செய்யாமல் பழுதடைந்துள்ளது. தற்போது பூம்புகார் சுற்றுலா மையத்தை புதுப்பித்து மெருகேற்றும் வகையில் பிரமாண்ட திட்டம் செயல்படுத்த பட உள்ளது.

அதே போல் தடைபட்டுள்ள பாரம்பரிய திருவிழாவான இந்திர திருவிழா இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக நடத்த முடியாது. வரும் ஆண்டுகளில் நடைபெற முதலமைச்சரிடம் ஆலோசித்து இந்திர விழா நடத்த நடவடிக்கை  எடுக்கபடும் என்று கூறினார்.

மேலும், பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதனால் உலகப் பிரசித்தி பெற்ற அலையாத்தி காடுகளைக் கொண்ட பிச்சாவரம் சுற்றுலா மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தேன் அங்குள்ள உணவு விடுதி, தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் ஆய்வு செய்யப்பட்டது.



வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் குடிநீர், சுகாதார வசதி போன்ற வசதிகளை மேம்படுத்தவும், கூடுதலாக எந்தெந்த வசதிகளை செய்யலாம் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினேன். படகு சவாரி காலையில் துவங்கும் நேரத்தை முன்னதாகவே துவங்கவும், மாலையில் படகு சவாரி முடியும் நேரத்தை நீட்டிக்கவும் வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரும் நோக்கத்தோடு ஆய்வு செய்ததன் அடிப்படையில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும். சுற்றுலா ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்களா எனவும் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா எனவும் ஆய்வு செய்து கேட்டறிந்தேன்.



இங்கு தரமான உணவு விடுதி அமைக்கவும், தங்கும் அறைகளும் விரைவில் சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும். ஏற்கனவே இந்தப் பகுதியில் உள்ள தீவுப் பகுதியில் விடியல் விழாவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கொண்டு கடல் உணவு திருவிழாவும் நடத்தப்பட்டுள்ளது.

Must Read : தேர்தல் வாக்குறுதியில் சொன்னது மட்டுமல்லாது சொல்லாததையும் செய்துள்ளோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதுபோன்ற விழாக்களை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக இதைக் கொண்டு வருவதற்கு அனைத்து அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என  அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: