கொரோனா தொற்று குறைந்தால் வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126- வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த அவரது படத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் ஆகியோர்மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதனையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இந்திய மக்களால் போற்றப்பட்ட மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவரது படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்கு தமிழக மக்கள் சிறப்பாக ஒத்துழைப்பு தருகிறார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், சென்னையில் கொரோனா தொற்று குறைவது ஆறுதலாக இருக்கிறது.கொரோனா தொற்றால் இறந்தவர்கள் தடுப்பூசி போட்டுகொள்ளாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள் தான். அதனால் தான் 95 சதவீதம் இறப்பு விகிதம் உள்ளது.
கொரோனா தொற்று நிலையை பொறுத்து வரும் வாரங்களில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார். மேலும்,கொரோனா தொற்று குறைந்தால் வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்காது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.