ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மியான்மரில் சிக்கி தவித்த 22 தமிழர்கள் சென்னை திரும்பினர்... நேரில் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

மியான்மரில் சிக்கி தவித்த 22 தமிழர்கள் சென்னை திரும்பினர்... நேரில் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

விமான நிலையம் சென்று வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான்

விமான நிலையம் சென்று வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான்

மியான்மாரில் இருந்து 22 பேர் மீட்கப்பட்டு தாய்லாந்து வழியாக ஐதரபாத், மும்பை வந்தவர்கள் இன்று விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

மியான்மாரில் சிக்கி தவித்து சென்னை திரும்பிய  22 பேரை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

தமிழகம் மற்றும் இந்தியாவில் இருந்து தாய்லாந்திற்கு தகவல் தொழில் நுட்ப பணிக்காக அழைத்து சென்று சட்டவிரோதமான பணிகள் செய்ய சொல்லி துன்புறுத்திவதாகவும் அங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்திய தூதரக உதவியுடன்  தமிழக அரசின் அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை முலமாக கடந்த மாதம் மியான்மரில் இருந்து 26  பேரை மீட்டு அழைத்து வரப்பட்டனர்.

தற்போது 3ம் கட்டமாக சென்னை, ராமநாதபுரம், கடலூர், அரியலூர், திருவள்ளூர், தர்மபுரி, திருவாரூர், கோவை, காஞ்சிபுரம், விருதுநகர், திண்டுக்கல்,மதுரை ஆகிய பகுதிகளை சேர்ந்த சிதம்பரவர்மன், ஞானபிரகாஷ், விக்னேஷ், சூர்யா, இம்ரான் தீன், அருண்குமார் உள்பட 22 பேர் மியான்மாரில் இருந்து மீட்கப்பட்டு தாய்லாந்து வழியாக ஐதரபாத், மும்பை ஆகிய விமான நிலையங்களுக்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து விமானங்கள் முலம் சென்னை விமான நிலையம் வந்தனர்.  சென்னை விமான நிலையத்தில் 22 பேரையும் தமிழக அயலக வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். பின்னர் தமிழக அரசின் செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழகத்தில் இருந்து வாழ்வாதாரத்திற்காக போலி ஏஜெண்டுகள் மூலம் ஆசை வார்த்தைகளை நம்பி  கம்போடியா, மியான்மார் ஆகிய நாடுகளுக்கு சென்ற இளைஞர்கள் சட்ட விரோதமாக செயல்பட வற்புறுத்தியதால் தவித்தனர்.அவற்றை மறுத்த காரணத்தினால் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற தகவல் பெற்றோர்கள் மூலமாக தமிழக முதலமைச்சருக்கு வந்தது.

இதையும் படிங்க: தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

முதலமைச்சர் உத்தரவின் பேரில் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மியான்மார், கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து 64 பேரை அழைத்து வந்திருக்கிறோம். தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டம் வேறு யாருக்கும் ஏற்பட கூடாது என்பதை விழிப்புணர்வு செய்ய வேண்டும். இளைஞர்கள் யாரும் ஏமாற கூடாது. மேலும் அங்குள்ளவர்களை மீட்டெக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அரசு துறைகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. சுற்றுலா விசாவில் அழைத்து சென்று வேலைகள் தருவது. வேலை செய்யாவிட்டால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விழிப்புணர்வு ஏற்பட்டதால் தான் போலி ஏஜெண்டுகள் முலம் செல்வது குறைந்து உள்ளது என கூறினார்.

மியான்மரில் இருந்து மீட்கப்பட்டு தமிழகம் திரும்பிய பூந்தமல்லியை சேர்ந்த ராமன் கூறுகையில்,

தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மியான்மரில் இருந்து உயிர் பிழைத்து வந்ததே பெரிய விசயமாக நினைக்கிறோம். எங்களுக்கு இது மறுபிறவியாக நினைக்கிறோம். இக்கட்டான சூழ்நிலையில் இருந்தோம். சீன நிறுவனங்கள் தான் உள்ளன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்று பொய்யான தகவலை சொல்லி சட்ட விரோதமாக செயல்பட வேண்டும். 17 மணி நேர வேலை. வேலை செய்ய வில்லை என்றால் தண்டனை தருவார்கள். சரியான உணவு, தூக்கம் இல்லை. சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் பணம் கேட்டார்கள். ஏழ்மையான சூழலால் வேலைக்கு சென்றோம்.

தமிழக அரசு உதவி நாடுகிறோம் என்பதை  அறிந்ததும் ஒரு வேலை உணவு தந்து அறையில் அடைத்து வைத்தனர். பல கொடுமைகளில் சிக்கிய எங்களை காப்பாற்றிய தமிழக அரசுக்கு நன்றி. எங்கள் வாழ்க்கைகளில் படிப்புக்கு ஏற்ற வகையில் அரசு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். ஏஜெண்டுகளுக்கு பணம் தந்து தான் சென்றோம். வெளிநாட்டிற்கு வேலை செல்பவர்கள் சரியாக விசாரித்து செல்ல வேண்டும் என்றார்.

Published by:Arunkumar A
First published:

Tags: Chennai Airport