Corona | மூன்றாவது அமைச்சராக மனோ தங்கராஜூக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்து பதிவாகிவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாவதன் காரணமாக படுக்கைகள் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்தவருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு 32,000-த்தை நெருங்கியுள்ளது. சாமானிய மக்களைக் கடந்து அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது.

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து சமீபத்தில் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பதவியேற்றனர். அதன்தொடர்ச்சியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்தொடர்ச்சியாக, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில், பத்மநாமபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனோ தங்கராஜ், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நாளன்று முழு நாளும் சட்டமன்றத்தில் இருந்துள்ளார். அடுத்த நாள் காலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை காலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: