Home /News /tamil-nadu /

சாதிய வன்முறைக்கு காரணம் மனு தர்மம் தான்.. ஆ.ராசாவிற்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்!

சாதிய வன்முறைக்கு காரணம் மனு தர்மம் தான்.. ஆ.ராசாவிற்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்!

ஆ.ராசா, அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆ.ராசா, அமைச்சர் மனோ தங்கராஜ்

சாதி பாகுபாட்டற்ற சமூகமே ஒன்றிணைந்த மனிதநேயமிக்க மக்கள் சமூகம். அதுவே அம்பேத்கராலும், பெரியாராலும், பேரறிஞராலும், முத்தமிழறிஞராலும் வளர்த்து வரப்பட்டிருக்கின்றது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு ஆ.ராசாவின் பேச்சு புறணியில் அடித்தார் போல் இருந்திருக்கும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆ.ராசா, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, திமுக எம்.பி., மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்தியிருப்பதாக விமர்சித்திருந்தார்.

    இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ஆ.ராசா தனது ட்விட்டர் பக்கத்தில், சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா என்று கேள்வியெழுப்பியுள்ளார். மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, கோயில் நுழைவு மறுக்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் அதிகாரத்தாலும், பரப்புரையாலும் 90 சதவீத இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும் என்றும் பதிவிட்டுள்ளார்.



    இந்நிலையில், மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதிய வன்முறைகளும், தீண்டாமை கொடுமைகளும் இன்றளவும் நாட்டில் பெருந்துயராக இருப்பதற்கு காரணம் மனுதர்மம் தான்.

    இந்தியாவில் மக்களுக்குள் ஏற்ற தாழ்வுகளை புகுத்தி நாட்டை சீரழித்து வரும் சனாதானத்தை தூக்கி பிடித்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு ஆ.ராசாவின் பேச்சு புறணியில் அடித்தார் போல் இருந்திருக்கும். தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும், கொடுமைகளும் இன்றளவும் மக்களை வருத்திக் கொண்டிருக்கின்றன. ஆ.ராசா அவர்களின் கருத்திலுள்ள உண்மைகளை சாமானிய மக்கள் அறிந்திருப்பர்”  என தெரிவித்தார்.

    இதையும் வாசிக்க: பள்ளிகளில் மதமாற்றம் நடைபெற்று இருந்தால் தமிழகத்தில் 70 சதவிகிதம் கிறிஸ்துவர்களாக இருந்திருப்பார்கள் - பீட்டர் அல்போன்ஸ்

    மேலும் “சாதி பாகுபாட்டற்ற சமூகமே ஒன்றிணைந்த மனிதநேயமிக்க மக்கள் சமூகம். அதுவே அம்பேத்கராலும், பெரியாராலும், பேரறிஞராலும், முத்தமிழறிஞராலும் வளர்த்து வரப்பட்டிருக்கின்றது. இனியும் திராவிட மாடல் ஆட்சியின் மூலம் அனைத்து மக்களும் ஒன்றிணைத்த சமூகமாக தமிழ்நாடு திகழும். இதனை திரித்து மக்களுக்குள் பிரிவினையை தூண்டிவிடும் கயவர்களுக்கு மக்களே பாடம் புகட்டுவர்.” எனவும் கூறியுள்ளார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: A Raja, Manusmriti, Minister Mano Tangaraj

    அடுத்த செய்தி