தமிழக ஐடி அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கம்!

Web Desk | news18
Updated: August 7, 2019, 11:17 PM IST
தமிழக ஐடி அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கம்!
நீக்கப்பட்ட அமைச்சர் மணிகண்டன்
Web Desk | news18
Updated: August 7, 2019, 11:17 PM IST
தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் தற்போது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தொழில்நுட்பத் துறையை கூடுதல் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் கடிதத்துக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கையெழுத்திட்டுள்ளார்.


முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதல்முறையாக அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு கேபிள் டிவி தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்துப் பேட்டி அளித்ததால் அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரத்திலிருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வானவர் மணிகண்டன்.

Loading...

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிப்பை நிறைவுசெய்த மணிகண்டன், மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உதவி பேராசிரியர் ஆகவும் பணியாற்றி உள்ளார்.

அதிமுக-வின் மருத்துவ அணி துணைச் செயலாளராகத் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் மணிகண்டன்.

மேலும் பார்க்க: அஜித் படம் பார்க்க லீவு கேட்ட மாணவன்.. கடுப்பான ஆசிரியர்
First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...