தமிழன்னை சிலை கற்சிலையா... பளிங்குச் சிலையா?: அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

 • Last Updated :
 • Share this:
  மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் அமைக்கப்படவுள்ள தமிழன்னை சிலை கற்சிலையாகவே அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

  சென்னை கோட்டூர்ப்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த தமிழ் தொழில் முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா ஒன்றில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டார்.

  விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழர் தொன்மையை வெற்றி அடையவிடாத எந்த சக்திகளையும் நாங்கள் விடமாட்டோம். விரைவில் கீழடியில் அகழ் வைப்பகம் தொடங்கப்படும். தமிழகத்தில் இருக்கின்ற 12 கோட்டைகள் மற்றும் 4 அருங்காட்சியங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். தேனி, திருவண்ணாமலையில் புதிதாக அருங்காட்சியகங்கள் அமைக்கவுள்ளோம்.

  மதுரையில் அமையவுள்ள தமிழன்னை கற்சிலையாக அமையுமா? பளிங்குச் சிலையா? எனவும், அது தமிழன்னையா? ஆரிய மாதாவா? என்று விவாதங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. பல சிற்பிகள் மற்றும் நிபுணர்கள் கூறியதன்படி தமிழன்னை சிலை கற்சிலையாக அமைக்க முடிவு செய்துள்ளோம்.

  கீழடியில் கிடைத்த பொருட்களுக்கும் சங்க இலக்கியச் சான்றுகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியிருந்த சு.வெங்கடேசன், வேறு கட்சியைச் சார்ந்தவர் என்றாலும்கூட கீழடி அகழாய்வில் தொடர்ச்சியாக அவரின் கருத்தைக் கேட்டுப் பெறுகிறோம். புதிய கல்விக் கொள்கையில் பல விசயங்கள் ஆதரிக்கவும் எதிர்க்கவும் உள்ளன. விரைவில் அரசு ஒரு கொள்கை முடிவை எடுக்கும்" எனக் கூறினார்.

  மேலும் பார்க்க...

  Published by:Ilavarasan M
  First published: