ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை அரசு நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல்

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை அரசு நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

doctor mgr medical university: எம்ஜிஆர் மருத்துவர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்ட மசோதா தாக்கல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்வதற்கான சட்ட மசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார்.

தமிழகத்தில அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவை தமிழக அரசு அண்மையில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதை தொடர்ந்து இன்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமனம் செய்வதற்கான சட்ட மசோதாவை மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார்.

குஜராத், தெலுங்கானா, கர்நாடகா பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இசைவுடன் வேந்ததரால் துணை வேந்தரை நியமனம் செய்வதற்கு அம்மாநிலத்தில் உள்ள சட்டங்கள் வழிவகை செய்துள்ளது. இதே போல தமிழ்நாட்டிலும், 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சட்டத்தினை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்வதாக சட்டமுன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டத் திருத்ததின்படி வேந்தர் என்பதற்கு பதிலாக அரசு என்ற சொற்றொடர் மாற்றம் செய்யப்படுவதாகவும், துணை வேந்தர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினாலோ துணை வேந்தரை பதவியில் இருந்து நீக்ககூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றம்... மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று வீடுகள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

துணைவேந்தரின் விளக்கத்தை கேட்கும் விதமாக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் அல்லது, அரசு தலைமைச்செயலாளருக்கு குறையாத ஒரு அலுவலரை கொண்ட ஒருநபர் விசாரணை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டதிருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Murugesh M
First published:

Tags: Ma subramanian, TN Assembly, Vice chancellor