முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாங்க உள்ளே நடத்துனோம்... நீங்க வெளியே கேட்கிறீங்க... எப்படி தரமுடியும்...? டிடிவி தினகரனுக்கு மா.சுப்பிரமணியன் பதில்

நாங்க உள்ளே நடத்துனோம்... நீங்க வெளியே கேட்கிறீங்க... எப்படி தரமுடியும்...? டிடிவி தினகரனுக்கு மா.சுப்பிரமணியன் பதில்

மா. சுப்பிரமணியன்

மா. சுப்பிரமணியன்

மத்திய அரசின் சார்பில் அனுப்பப்படும் ஓமைக்ரான் முடிவுகள் வெளிவர காலதாமதம் ஆகிறது. நோய் தொற்று காலத்தில் மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு விரைந்து பதிலளிக்க வேண்டும் என்றும் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

  • Last Updated :

ஓமைக்ரான் பரவலை காரணம் காட்டி எதிர்க்கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கும் திமுக அரசு, உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்திருந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் 'தரவு அலகு' (Data Cell) தொடங்கி வைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவருடன் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் ஓமைக்ரான் குறித்த அறிகுறிகள் 97 பேருக்கு உள்ளது. மத்திய அரசு உறுதி படுத்த காலதாமதம் ஆகிறது. அதற்குள் பிணியாளர்கள் குணமடைந்து வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது.

மத்திய அரசின் சார்பில் அனுப்பப்படும் ஓமைக்ரான் முடிவுகள் வெளிவர காலதாமதம் ஆகிறது. நோய் தொற்று காலத்தில் மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு விரைந்து பதிலளிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சி கூட்டங்களில் மட்டும்தான் ஓமைக்ரான் பரவுமா: டிடிவி தினகரன்

எனவே மரபியல் முடிவை விரைந்து மத்திய அரசு தர வேண்டும், இது குறித்த கோரிக்கை மத்திய குழுவிடம் வைக்க உள்ளோம். Non risk நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை மத்திய அரசிடம் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

எதிர்கட்சிகளால் மட்டும்தான் கொரானா பரவுமா என்று டி.டி.வி தினகரனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கோவையில் நடந்த திமுக கூட்டம் உள் அரங்கில் நடைபெற்றது. ஆனால் அமமுக வெளி இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள், அதனால் தான் அனுமதி கிடைக்க வில்லை. பொது வெளியில் ஊர்வலம், மாநாடு நடத்த மட்டும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தனியாக வந்து அஞ்சலி செலுத்த அனுமதி வாங்கி ஊர்வலம் சென்ற ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகிய அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிங்க: ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி

top videos

    மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு வாங்குவதில் மாநில அரசு 100% உறுதியாக உள்ளது. மற்ற கட்சிகளை விட திமுகவுக்கு தான் அதிக அக்கறை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: DMK, Ma subramanian, TTV Dinakaran