• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மத்திய அரசு அனுமதி அளித்ததும் முதல் மாநிலமாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மத்திய அரசு அனுமதி அளித்ததும் முதல் மாநிலமாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்ரமணியன்

மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்

மத்திய அரசு 2 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளித்தவுடன் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் பணிகளை தொடங்கி விடுவோம் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

  • Share this:
    கோவை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு கவனிப்பு பிரிவினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார். மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியம், ‘உலக கை கழுவும் தினம் அக்டோபர் 15ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிகழ்வை கோவையில் தொடங்கி வைத்தாகவும் தெரிவித்த அவர், சற்றே குறைப்போம் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்தாகவும் உப்பு, சர்க்கரை, எண்ணை போன்றவற்றை உணவில் குறைக்கும் விழிப்புணர்வு மற்றும் உபரி உணவுகளை வீணக்கமால் உபயோகப்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், ‘திருமணம், தனியார் நிகழ்வில் மீதமாகும் உபரி உணவை ஆதரவற்ற மக்களுக்கு கொண்டுச் செல்ல தன்னார்வ ஆர்வலர்களின் உதவியுடன் அரசு கைகோர்த்து செயல்படுத்தவுள்ளோம் எனவும் அதற்கான வாகனத்தை இன்று தொடங்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் விஷம் எனவும் அந்த எண்ணெய்யை மீண்டும் உபயோகிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை கொள்முதல் செய்து பயோ-டீசல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும் கின்னஸ் சாதனை முயற்சிக்காக கோவையில் 550 டன் அளவில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை பயோ டீசலாக மாற்றும் முயற்சியில் ஈடுபடவுள்ளதாகவும், ஏற்கனவே பிரேசில் நாட்டில் 500 டன் எண்ணெயை மாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    அரசு மருத்துவமனையில் எடை குறைந்து பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க தனிப்பிரிவு 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரைக்கும் 5 மெகா தடுப்பூசி முகாமில் 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில்
    93% பேர் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், கோவையில் மண்டலம் வாரியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாகனங்கள் இன்று தொடங்கி வைத்துள்ளதாகவும் 5 மண்டலத்திற்கு 5 வாகனம் ஒதுக்கீடு செய்யப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.

    2 வயது முதல் 18 வயசுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு உத்தரவு அளித்தவுடன் முதல் மாநிலமாக தமிழ்நாடு பணிகளை தொடங்கி விடும் எனவும் பண்டிகை காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது எனவும் தெரிவித்தார்.

    மேலும் மத்திய அரசு நிபுணர் குழு ஆய்விற்கு பிறகு மருத்துவப்படிப்பிற்கான கூடுதல் இடங்களைக் கேட்டு பெறுவோம் எனவும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: