ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சீனாவில் பரவும் பிஎப் 7 கொரோனா..! அமைச்சர் சொன்ன ஆறுதல் செய்தி..!

சீனாவில் பரவும் பிஎப் 7 கொரோனா..! அமைச்சர் சொன்ன ஆறுதல் செய்தி..!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வந்த 13 பேரின் கொரோனா ஆய்வு முடிவில் அவர்களுக்கு BF7 கொரோனா இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்களுக்கு BF7 உருமாறிய கொரோனா தொற்று இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில், பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், நலம் 365 என்ற யூ - டியூப் சேனலை தொடங்கி வைத்தார். இதில் அரசின் சுகாதார திட்டங்கள், பல்வேறு நோய்கள் குறித்து விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2020ஆம் ஆண்டு விதிகளை மீறி சாதி வாரி இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும், செவிலியர்கள் விவகாரத்தில் தவறுக்கு முக்கிய காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான் எனவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, பொது சுகாதாரத்துறையில் 2200 செவிலியர் பணிகள் காலியாக உள்ளதாகவும், தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு இந்த பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், வெளிநாடுகளில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்த 6 பேருக்கு ஏற்கெனவே கண்டறியப்பட்ட கொரோனா வகைகள்தான் உள்ளன எனவும், தமிழ்நாட்டில் BF7 உருமாறிய கொரோனா இல்லை எனவும் கூறினார்.

First published:

Tags: Corona, Omicron BF 7 Variant, Tamilnadu