ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் எத்தனைபேருக்கு ஒமைக்ரான் அறிகுறி? - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

தமிழகத்தில் எத்தனைபேருக்கு ஒமைக்ரான் அறிகுறி? - அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது நாள்தோறும் 250 என்ற விதத்தில் பாதிப்பு கண்டறியப்படுகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது நாள்தோறும் 250 என்ற விதத்தில் பாதிப்பு கண்டறியப்படுகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது நாள்தோறும் 250 என்ற விதத்தில் பாதிப்பு கண்டறியப்படுகிறது.

 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் 129 நபர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருக்கிறது என்றும், 16 நபர்கள் தற்போது ஒமைக்ரான் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  சென்னை அசோக் நகரில் ஒரே தெருவில் உள்ள இரு வீடுகளில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த பகுதியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

  அசோக் நகர், எல்.ஜி.ஜி.எஸ் காலனி 19-வது தெருவில் உள்ள இரண்டு வீட்டில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி தனிமை படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிடுவதற்காக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

  அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது நாள்தோறும் 250 என்ற விதத்தில் பாதிப்பு கண்டறியப்படுகிறது. சென்னையில் 39,537 தெருக்கள் உள்ள நிலையில் 507 தெருக்களில் கொரோனா தொற்றாளர்கள் உள்ளனர். இதில் 429 தெருக்களில் 3-க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் 78 தெருக்களில் 3 பேருக்கும், 42 தெருக்களில் 4 பேருக்கும்,18 தெருக்களில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 10 பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 4 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 10 முதல் 25 பேர் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள ஒரு தெரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது என்று கூறினார்.

  Read More : அரசு அலுவலர்களே முடிவு எடுத்தால் மக்கள் பிரதிநிதியாகிய நாங்கள் எதற்கு? போராட்டத்தில் குதித்த ஊராட்சி மன்ற தலைவர்கள்

  மேலும், கொரோனோவுக்கு தேவையான மருந்து நம்மிடம் தயராக உள்ளது. முதல் தவணை தடுப்பூசி 86% இரண்டாம் தவணை தடுப்பூசி 58% செலுத்தப்பட்டுள்ளது. டெங்கு தற்போது கட்டுக்குள் இருக்கிறது. தற்போது 600 நபர்களுக்கு பாதிப்பு உள்ளது.

  Must Read : கனிமொழி - உதயநிதி இடையே அதிகார போட்டி?

  மீண்டும் பள்ளி திறப்பு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட முடிவுகள் வரும் 31ம் தேதி தமிழக முதல்வர் ஆலோசனை செய்த பின்னர் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

  First published: