நியூஸ்18 தமிழ்நாடு செய்தி எதிரொலி : கிருஷ்ணகிரியை சேர்ந்த படுக்கைப் புண் நோயாளிக்கு அரசு உதவி

Youtube Video

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தண்டுவட பாதிப்பு ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

 • Share this:
  படுக்கைப் புண் பாதிப்பால் அவதியடைந்து வரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சீனிவாசனுக்கு உரிய வசதிகள் செய்துக்கொடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  தமிழ் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை படுக்கை புண் பாதிப்புக்கு சிகிச்சை கிடைக்காமல் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா காலத்தில் மேலும், பலருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதால் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி, நேற்று செய்தி வெளியிட்டது.

  அதன் எதிரொலியாக, இன்று, நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவண்ணாமலையில், தண்டுவட பாதிப்பு ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், படுக்கைப்புண் பாதிப்பால் அவதியடையும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சீனிவாசனுக்கு தேவையான உதவிகள் செய்துத்தரப்படும் எனவும் கூறினார்.

   

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: